கோஷ்டி திரைவிமர்சனம்

 கோஷ்டி திரைவிமர்சனம்

காஜல் அகர்வால், யோகி பாபு, ஜெய், ரெடின் கிங்ஸ்லி, கே.எஸ்.ரவிகுமார் மற்றும் பலர் நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “கோஷ்டி”.

எதை பேசுகிறது இப்படம்?

லாஜிக்கை கொலை செய்து நம்மை சிரிக்க வைப்பதாக நினைத்து எடுக்கப்பட்ட படம் இது. எந்த ஒரு கருத்தையும் இப்படம் பதிவு செய்யவில்லை.

கதைப்படி,

அப்பாவுமான ரகுவரனும் அவரது நண்பர்களும் சேர்ந்து கைது செய்து சிறையிலடைக்கிறார்கள். இதனிடையே ரகுவரன் இறந்துவிட்ட நிலையில் காஜல் அகர்வால் இன்ஸ்பெக்டராகிறார். தன்னை கைது செய்தவர்களை பழிவாங்க கே.எஸ்.ரவிக்குமார் சிறையிலிருந்து தப்பிக்கிறார். இதை அறியும் காஜல் அகர்வால் தன்னுடைய அப்பாவின் நண்பர்களை காப்பாற்ற முயற்சி செய்கிறார்.

உதவி இயக்குனர்களான யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, விஜய் டிவி ஜெகன் மூவரும் காஜல் அகர்வாலை தங்கள் கதைக்கு பொருத்தமானவர் என்பதால் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்து வரும் போது ஶ்ரீமனின் மருத்துவ ஆராய்ச்சிக் கூடத்தில் ஒரு ஜாடியில் இருக்கும் வாயுவை முகர்ந்து பார்த்ததால் இறந்து போகிறார்கள். இறந்த பின்னரும் காஜல் அகர்வாலை பின் தொடர்ந்து பல்வேறு தொல்லைகள் கொடுத்து அவரது இன்ஸ்பெக்டர் வேலையும் பறிபோகிறது.

காஜல் அகர்வால் அப்பாவின் நண்பர்களை காப்பாற்றினாரா? அவரது இன்ஸ்பெக்டர் வேலை திரும்ப கிடைத்ததா? இல்லையா? என்பது மீதிக்கதை..

காஜல் அகர்வால் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டருக்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாத ஒரு பாத்திரம் அது.

நடிப்பார்த்தாக்கான வேலை இப்படத்தில் யாருக்கும் இல்லை.

யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ஸ்ரீமன், ஜெகன் என அனைவரும் கொடுக்கப்பட்ட வசனத்தை பேசி சென்றுள்ளனர்.

கல்யாண் இயக்கத்தில், இதுவரை வெளியான குலேபகாவலி, ஜாக்பாட், காத்தாடி போன்ற படங்களில் குலேபகாவலி மட்டுமே சுமாராக இருக்கும். மீதி இரண்டு படங்களும் சோதனையே அந்த பட்டியலில் கோஷ்டி படமும் இணைந்துள்ளது.

கோஷ்டி – பயமில்லா பேய் படம்.

Related post