நிர்வாண போட்டோ ஷூட்; நடிகைக்கு போலீஸ் வைத் செக்!

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பூனம் பாண்டே. ஆரம்ப கட்டத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக கவர்ச்சி உடை அணிந்து நடித்து வந்தார்.
மேலும், பிரபலம் ஆக ஆக, ஆடையும் குறைந்து கொண்டே வந்தது. இவர், சாம் பாம்பே என்பவரை 2020ல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கோவாவில் உள்ள கனகோனாவில் விடுமுறையில் நிர்வாண போட்டோ ஷூட் ஒன்றை எடுத்துள்ளனர்.
பூனம் பாண்டேவின் நிர்வாண போட்டோவை இணையத்தில் பதிவேற்றம் செய்தனர். இந்த போட்டோ இணையத்தில் மிகப்பெரும் வைரலானது.
பின், சிறிது நாட்களில் சாம் பாம்பே தன்னை துன்புறுத்துவதாக கூறி, அவரை மும்பை போலீஸில் சிக்க வைத்து அவரை ஜெயிலுக்கு அனுப்பினார் பூனம் பாண்டே.
இந்நிலையில், 2020ல் கோவாவில் நிர்வாண போட்டோஹூட் எடுத்ததற்காக கனகோனா போலீஸார் பூனம் பாண்டே மற்றும் சாம் பாம்பே மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்தது. இந்த குற்றப்பத்திரிகை பூனம் பாண்டேவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவர் மீதும் பொது இடங்களில் ஆபாசமான செயல், ஆபாசமான வீடியோ மற்றும் திறந்த வெளியில் நடனம் மற்றும் பாடல் பாடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.