ஆகஸ்ட் 31ல் வெளிவரும் கோட் படத்தின் நான்காவது பாடல்!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் கோட்.
படமானது வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இந்நிலையில், படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்லதொரு வரவேற்பைப் பெற்ற நிலையில், நான்காவது பாடலான பார்ட்டி பாடல் வரும் 31 ஆம் தேதி வெளிவரும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வைரலான நிலையில், நான்காவது பாடலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.