கோட் விமர்சனம் 3.5/5
இயக்கம்: வெங்கட் பிரபு
நடிகர்கள்: விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சிநேகா, மீனாட்சி சவுத்ரி
ஒளிப்பதிவு: சித்தார்த் நுனி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பு : ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மெண்ட்
கதைப்படி,
தீவிரவாத தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் காந்தி (விஜய்). இவரது மனைவியாக வருபவர் சிநேகா. இவர்களுக்கு ஜீவன் என்ற மகன் இருக்கிறார். இரண்டாவதாக கர்ப்பமாக இருக்கிறார் சிநேகா.
விஜய்யின் டீமில் தான் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.
விஜய் – சிநேகா தம்பதியினர் அனைவரும் தாய்லாந்திற்கு சுற்றுலா செல்லும் போது ஒரு சம்பவம் நடக்கிறது.
இந்த சம்பவத்தில், தனது குடும்பத்தை இழக்கிறார் காந்தி. வருடங்கள் உருண்டோட, ஏர்போர்டில் பணிபுரிபவராக வருகிறார் காந்தி.
சினேகாவிடம் மகள் வளர்கிறார். வேலை காரணமாக ரஷ்யா செல்கிறார் காந்தி. அங்கு தனது மகனான ஜீவனை காண்கிறார்.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
இரண்டு கதாபாத்திரங்களில் களம் இறங்கி அடித்திருக்கிறார் விஜய். ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பின் உச்சத்தை கொடுத்திருக்கிறார்.
பல இடங்களில் ரசிகர்களின் ரசனையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு மாஸ் காட்சிகளையும் அள்ளிக் கொடுத்திருக்கிறார்.
சண்டைக் காட்சியில் அதிகப்படியான ரிஸ்ட் எடுத்து காட்சிகள் ஒவ்வொன்றிற்கும் உயிர் கொடுத்திருக்கிறார் விஜய்.
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மகன் விஜய்யின் உருவத்தை தத்ரூபமாக கொண்டு வந்து காட்சிகளை நன்றாகவே செதுக்கியிருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.
மாநாடு படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு வெற்றி படைப்பைக் கொடுத்து ரசிகர்களின் அன்பை பெற்றுக் கொண்டார் இயக்குனர் வெங்கட் பிரபு.
படத்தின் பெரிய வீக்னஸ் என்றால் அது யுவன் ஷங்கர் ராஜா தான்.. படத்திற்கான இசை ஒரு இடத்திலும் கொடுக்கவில்லை. பாடல்களும் பெரிதளவில் சறுக்கியிருக்கிறது.
ஒளிப்பதிவு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் விஜய்யை நம்றாகவே பயன்படுத்தியிருக்கிறார் வெங்கட் பிரபு..
கோட் விஜய்யின் கேரியரில் பெஸ்ட் என்று சொல்ல முடியாவிட்டாலும், கோட்’டும் ஒரு வெற்றி படம் என்று கடந்து செல்லலாம்.
3 மணி நேரம் படத்தின் உழைப்பிற்காகவே படக்குழுவினரை வெகுவாக பாராட்டலாம். கதையிலும் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.
கோட் – விஜய்யின் பாய்ச்சல்