சென்னையில் மார்கழியில் மக்களிசையை பறையிசைத்து துவங்கிவைத்த கனிமொழி எம் ,பி, மற்றும் ஜீவி பிரகாஷ்.

 சென்னையில் மார்கழியில் மக்களிசையை பறையிசைத்து துவங்கிவைத்த கனிமொழி எம் ,பி, மற்றும் ஜீவி பிரகாஷ்.

கலை மக்களுக்கானது, அக்கலையை ஜனநாயகப்படுத்தும் முழு நோக்கத்தோடு நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுக்கும் மார்கழியில் மக்களிசை என்ற பெயரில் கலை நிகழ்ச்சியை சென்ற ஆண்டு நடத்தி வந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு டிசம்பர் 18 -ஆம் தேதியன்று மதுரையிலும்,19 ஆம் தேதி கோவையிலும் மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சியை நீலம் பண்பாட்டு மையம் தொடங்கியது. மதுரை மற்றும் கோவை மக்களின் பெறும் வரவேற்பை பெற்றது. அதன் மாபெரும் தொடர்ச்சியாக சென்னையில் 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. தற்போது சென்னையில் முதல் நாள் நிகழ்ச்சியாக வாணி மஹாலில் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் பா.ரஞ்சித் ,இசையமைப்பாளர் ஜி.வி .பிரகாஷ்,நாடாளுமன்ற உறுப்பினர் மு.கனிமொழி மற்றும் எழுத்தாளர் ஆதவன் தீட்சனியா ஆகியோர் பறை அடித்து விழாவை மகிழ்ச்சியாக தொடங்கி வைத்தனர்.பின் நிகழ்ச்சியின் நிரலாக தொகுப்பாளர் தமிழ்பிரபா முன்னிலையில் சேலம் ஆதிமேளம் பறையிசை குழுவினர் ,தஞ்சை கரிசல் காட்டு மண்ணின் மைந்தன் கருங்குயில் கணேசன் மற்றும் குழு,ஆகியோர்களும் நிகழ்ச்சியின் நிறைவாக மக்களிசை பாடகர் செந்தில் மற்றும் ராஜலட்சுமி அவர்கள் மேடையில் அரங்கேற்றம் செய்யப்பட்டு கலை நிகழ்ச்சியை முடித்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக சிறப்பு அழைப்பாளர்களின் கரங்களால் விருது கொடுத்து கௌரவித்தனர். மேலும் இதனை தொடர்ந்து இனிவரும் ஏழு நாட்கள் மார்கழியில் மக்களிசை சென்னையில் வெவ்வேறு இடங்களில் அரங்கேற்றம் செய்யப்படும்.நாளை (25/12/2021) இந்நிகழ்ச்சியை மீண்டும் வாணி மஹாலில் தொடர்ந்து பம்பை பறையிசை குழு,புத்தர் கலைக்குழு, பாடகர் வி.எம்.மகாலிங்கம், மதிச்சயம் பாலா மற்றும் சுகந்தி ஆகிய கலைஞர்கள் மார்கழியில் மக்களிசை மேடையில் பங்கேற்க உள்ளனர், அனைவரும் வந்து ஆதரவு தருமாறு மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொள்கிறோம்.

கலை மக்களுக்கானது, கலையை ஜனநாயகப்படுத்துவோம்

Related post