பேட்மேன்-சூப்பர்மேனை விட சக்தி வாய்ந்தவர் அனுமன் – இயக்குநர் பிரசாந்த் வர்மா;

 பேட்மேன்-சூப்பர்மேனை விட சக்தி வாய்ந்தவர் அனுமன் – இயக்குநர் பிரசாந்த் வர்மா;

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், அசல் இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படமாக ‘ஹனு-மேன்’ தயாராகி இருக்கிறது. பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற ஜோம்பி ரெட்டி எனும் படத்திற்கு பிறகு. நாயகன் தேஜா சஜ்ஜா-பிரசாந்த் வர்மாவின் இரண்டாவது கூட்டணி தான் ‘ஹனு-மேன்’.

அமிர்தா ஐயர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் அனைத்து தரப்பிலிருந்தும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

‘ஹனு-மேன்’ படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பகிர்ந்துகொண்டதாவது,

நாயகன் தேஜா சஜ்ஜா :

அனுமனின் சிறிய மந்திரத்தை பாடிவிட்டு, பேச தொடங்கிய அவர், அனுமனை விட பெரிய சூப்பர் ஹீரோ நம்மிடம் இருக்கிறாரா..?

இந்த தலைமுறை இளைஞர்களுக்கு ஸ்பைடர் மேனும், பேட்மேனும்தான் சூப்பர் ஹீரோக்கள். ஏனென்றால் நாம் அவர்களை சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்கள் நமது கலாச்சாரத்தாலும் நமது அனுமனாலும் ஈர்க்கப்பட்டனர். அவர்களின் சூப்பர் ஹீரோக்கள் கற்பனையால் உருவாக்கப்பட்டவர்கள்.

ஆனால், அனுமன் நமது அசலான நாயகன். நமது கலாச்சாரம், நமது வரலாறு, ஹனுமன் எங்களது சூப்பர் ஹீரோ. அப்படிப்பட்ட மகான் அருளால் வல்லமை பெற்ற ஒரு இளைஞன் என்ன செய்வான் என்பதே இப்படத்தின் கதை.

இயக்குநர் பிரசாந்த் வர்மா :

சிறு வயதிலிருந்து எனக்கு விருப்பமான கடவுள் அனுமன் தான். அவரைப் பற்றி இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படமெடுத்திருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன்.

பட்ஜெட்டை பொருத்தமட்டில் நாங்கள் திட்டமிட்டதை விட ஐந்து முதல் ஆறு மடங்கு கூடுதலாக செலவானது. இதைப் பற்றி தயாரிப்பாளர் எங்களிடம் பேசும்போது, ‘எப்பொழுதும் உயர்வாக சிந்தியுங்கள். நாம் ஒரு சர்வதேச அளவிலான திரைப்படத்தை உருவாக்குவோம்’ என்று நம்பிக்கையுடன் கூறினார். எனவே அனுமன் தெலுங்கு படம் அல்ல. பான் இந்திய படமும் அல்ல. இது ஒரு சர்வதேச திரைப்படம்.

அனுமன் மிகப்பெரிய சூப்பர் ஹீரோ. அவர் சூப்பர் மேன் மற்றும் பேட்மேனை விட சக்தி வாய்ந்தவர். நம்மிடம் பல மார்வெல் மற்றும் டிசி சூப்பர் ஹீரோக்கள் ஏராளமாக உள்ளனர். சிறுவயதிலிருந்தே எனக்கு புராணக் கதைகளை கேட்பதும் பிடிக்கும். வாசிப்பதும் பிடிக்கும்.

என்னுடைய முந்தைய படங்களிலும் புராணக் கதைகளின் குறிப்புகள் இடம்பெற்றுள்ளது. முதன் முறையாக அனுமன் என்ற புராண கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறேன். இது முதன்மையானது. முக்கியமானது.

புராண இதிகாசங்களிலிருந்து சினிமாவிற்காக நிறைய கதாபாத்திரங்களை உருவாக்கினோம். ஏற்கனவே ‘ஆதிரா’ படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியானது. பெண்களை மையப்படுத்திய சூப்பர் ஹீரோ படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற திட்டமிட்டோம்.

இவை அனைத்தும் புராண கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்டு நிகழ்காலத்திற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டவை. அதனால் இதற்கு நிச்சயம் அதிக அளவிலான எதிர்பார்ப்பு இருக்கும்.

பேட்மேனுக்கான கோதம் சிட்டி எனும் மாய உலகத்தை போல், அனுமன் படத்திற்காக அஞ்சனாத்ரி என்ற கற்பனையான உலகை நிர்மாணித்திருக்கிறோம். காட்சிகள் ஒவ்வொன்றும் நேர்த்தியாக இருக்கும். நாங்கள் இதற்காக பல வி எஃப் எக்ஸ் ஸ்டுடியோக்களுடன் பணியாற்றி இருக்கிறோம். குறிப்பாக டீசருக்கான வி எஃப் எக்ஸ் ஹாலோ ஹியூஸால் உருவாக்கப்பட்டது.

இந்த திரைப்படம் ‘ஆர். ஆர். ஆர்’, ‘கார்த்திகேயா’ போன்று சிறந்த படைப்பாக உருவாக்கி இருக்கிறோம். இதுபோன்ற பிரம்மாண்டமான படைப்பிற்கு மொழி தடையாக இருக்காது. இந்த திரைப்படத்தை மற்ற மொழிகளிலும் வெளியிடுவதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம்.

என பலசுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.

டீசர் லிங்க் :

 

Related post