ஜப்பானில் சாதனை படைக்கும் ஆர் ஆர் ஆர்… உற்சாகத்தில் படக்குழு!

 ஜப்பானில் சாதனை படைக்கும் ஆர் ஆர் ஆர்… உற்சாகத்தில் படக்குழு!

இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜுனியர் என் டி ஆர் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் அடித்த படம் தான் ஆர் ஆர் ஆர். இப்படம் வெளியாகி சுமார் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை ஈட்டியது.

மேலும், இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் தட்டிச் சென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது இந்த படம்.

அதுமட்டுமல்லாமல், பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பல நாடுகளில் ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படம்.

ஜப்பான் நாட்டில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியான இப்படம், 200 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.

இதுவரை ஜப்பானில் மட்டும் சுமார் 119 கோடி வரை வசூல் செய்துள்ளதாக படக்குழு மகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறது.

 

Related post