தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி

 தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு தலைக்கவசம் (ஹெல்மெட் ) வழங்கும் நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் லீ மேஜிக் லாண்டர்ன் தியேட்டரில் இன்று இனிதே நடைபெற்றது

சிறப்பு விருந்தினர்களாக நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆய்வாளர் ரவி அபி ராம், நடிகர் மாஸ்டர் மகேந்திரன் இருவரும் கலந்துகொண்டு சினிமா பத்திரிக்கையாளர்களுக்கு ஹெல்மெட் வழங்கினார்கள் .

உதவி ஆணையர் ரவி அபிராம் பேசியதாவது ….

தலைக்கவசம் என்பது காலத்தின் கட்டாயம் ஹெல்மெட் என்பது ஒரு தனிமனித பழக்கவழக்கங்களில் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகும் . தனி மனித ஒழுக்கம் என்ற ஒன்று நடந்தாலே போதுமானது கடந்த சில ஆண்டுகளாகவே கொரானா காலகட்டம் என்பதினால் சாலைகளில் விபத்துக்கள் குறைந்து விட்டது ஹெல்மெட் அணியும் பழக்கம் பலருக்கு வந்ததினால் இறப்பு விகிதமும் குறைந்துவிட்டது .

இது பலரும் சேகரித்த ஒரு புள்ளிவிவரம் ஆகும் ஆகையால் தேசத்தின் மிக முக்கிய தூண்களாக இருக்கக்கூடிய பல விஷயங்கள் இருந்தாலும் ஊடகம் மிக முக்கியமானதொன்றாகும் அதிலும் குறிப்பாக சினிமா பத்திரிகையாளர்கள் என்பது மிகவும் ஜாலியான சந்தோஷமாக அனுபவித்து செயல்படக்கூடிய ஒரு வாய்ப்பு .

நான் இங்கு இருக்கும் அத்தனை பத்திரிகையாளர்களையும் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி இதை ஏற்படுத்திக் கொடுத்த சங்கத்தின் தலைவி கவிதாவுக்கு மிக்க நன்றி .

நான் அதிகம் தியேட்டர் சென்று சினிமா பார்ப்பதில்லை. படம் பார்க்க நேரம் கிடைப்பதில்லை. பத்திரிக்கையாளர்கள் ஆகிய நீங்கள் தரும் செய்திகளை வைத்தே சினிமா தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்கிறோம்.

கடைசியாகப் பார்த்த படம் மாஸ்டர் குறிப்பாக மாஸ்டர் மகேந்திரன் சிறுவயதிலிருந்து எனக்கு தெரியும் என்று இங்கே பலரும் சொன்னார்கள் மாஸ்டர் மகேந்திரன் என்கின்ற இவரை உங்களுக்கு மட்டுமல்ல சிறுவயதிலிருந்து தமிழ் நாட்டுக்கே தெரியும் என்று நகைச்சுவை உணர்வுடன் பேசி மகிழ்ச்சியுடன் விடை பெற்றார்.

மாஸ்டர் மகேந்திரன் பேசியதாவது தமிழ் சினிமாவில் பலகாலமாக இருந்து வருகிறேன். சிறு வயது முதல் எத்தனையோ பத்திரிகைகள் ஊடகங்கள் இவன் கஷ்டப்படுகிறான் நல்ல வரவேண்டும் நல்ல முயற்சி என்று பல பாசிட்டிவ் வார்த்தைகள் எழுதிய இந்த விரல்களுக்கும் வினாக்களுக்கும் எனது சிறப்பு வணக்கம். எனது சின்ன சின்ன படங்கள் விமர்சனங்களில் கூட சுமாரான படங்கள் ஆக இருந்தாலும் என் பெயரை குறிப்பிட்டு ஊக்கப்படுத்திய பத்திரிக்கையாளர்களை நான் என்றும் மறக்கமாட்டேன் ஹெல்மெட் என்பது மிக மிக சின்ன விஷயம் தான் ஆனால் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான விஷயமாகும் இதைப் பற்றி நான் புதிதாக எதுவும் சொல்லப் போவதில்லை கவிதா அவர்களது அன்புக்காக மட்டுமே இந்த மேடையில் நான் நிற்கிறேன் எல்லாரும் சேப் ஆக இருங்கள் ஹெல்மெட் பயன்படுத்துங்கள்.

இப்பொழுது மாறன் படத்தில் சின்ன அதே நேரம் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். அதன் பிறகு அர்த்தம் என்ற பான் இந்தியா மூவி ஐந்து மொழிகளில் தயாராகி வருகிறது.

அதன்பின் அமிகோ கேராஜ் என்ற படத்திலும் நடித்து வருகிறேன் . டைட்டீல் முடிவு செய்யப்படாத பல படங்கள் வரிசையாக இருக்கிறது .

மாஸ்டர் இரண்டாம்பாகம் பற்றி பலரும் கேள்வி கேட்கின்றார்கள் ஆனால் அந்த பவானி பற்றியும் இரண்டாம் பாகம் பற்றியும் லோகேஷ் கனகராஜ் மூளைக்குள் தான் பதில் இருக்கிறது.

மாஸ்டர் மாஸ்டர் மாஸ்டர் என்று பலரும் சொல்லும் பொழுது 30 வயதான எனக்கு இன்னும் அந்தப் பெயர் ஒட்டிக் கொள்கிறது என்று சில நேரங்களில் கடுப்பாக இருக்கும் ஆனால் மாஸ்டர் படத்துக்கு பிறகு இந்த பெயர் மகிழ்ச்சியை தருகிறது. பல நேரங்களில் பெருமையாக உணர்கிறேன் .

கமல் சார் சொன்ன ஒரு விஷயம் சைல்ட் ஆர்டிஸ்ட் ஆக இருப்பது முக்கியமல்ல அதை தக்க வைத்துக் கொண்டு நூல் பிடித்தது போல் பொறுமையாக நிறுத்தி நிதானமாக சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்து சாதிப்பது தான் மிகப்பெரிய வெற்றி இதுவரை 167 படங்கள் செய்துள்ளேன் அனைவரது வாழ்த்துக்களுக்கும் ஆதரவுக்கும் நன்றி என்று உணர்ச்சி பொங்க பத்திரிகையாளர்களுக்கு நன்றி சொல்லி விடைபெற்றார் மாஸ்டர் மகேந்திரன்

Related post