நடிகர் விஷாலின் முன்னாள் ஊழியர் கையாடல் வழக்கு, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

 நடிகர் விஷாலின் முன்னாள் ஊழியர் கையாடல் வழக்கு, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Digiqole ad

விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் பணி புரிந்த முன்னாள் ஊழியர் கணக்காளர் ரம்யா மீது பணம் கையாடல் தொடர்பாக அந்நிறுவனத்தின் மேலாளர் திரு.ஹரிகிருஷ்ணன் கொடுத்த புகாரை விரைந்து முடிக்க காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவு.

கணக்காளர் ரம்யா என்பவர் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபில்ம் ஃபேக்டரியில் பணியில் இருந்தபோது பண கையாடல் செய்ததாக அந்நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் புகார் ஒன்றினை காவல்துறையிடம் அளித்தார், அப்புகாரின் பெயரில் முதல் குற்றப்பத்திரிகை பதிவு செய்த பின்னரும் பல மாதங்களாக எந்த ஒரு விசாரணையும் நடைப்பெறாமல் இருந்த சூழ்நிலையில் மேலாளர் ஹரிகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையை விரைந்து முடிக்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார், மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார் 6 மாதத்திற்குள் இந்த வழக்கை விசாரித்த விரைந்து முடிக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Digiqole ad
Spread the love

Related post