3000 கோடி முதலீடு செய்யும் கே ஜி எப் தயாரிப்பு நிறுவனம்!

 3000 கோடி முதலீடு செய்யும் கே ஜி எப் தயாரிப்பு நிறுவனம்!

யஷ் நடித்த கே ஜி எஃப் 1 மற்றும் 2 பாகங்களும் பல கோடிகளை வசூலில் வாரிக்குவித்தது. இப்படத்தை மிகவும் பிரமாண்டமாக தயாரித்தது ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம். தொடர்ந்து காந்தாரா படத்தினையும் தயாரித்திருந்தது இந்நிறுவனம்.

இந்நிலையில் அடுத்ததாக, பிரபாஸின் சலார், கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா, பிருத்விராஜ் நடிக்கவுள்ள டைசன், ரிஷப் ஷெட்டி நடிக்கவுள்ள ‘ரிச்சர்ட் ஆண்டனி’,ஃபஹத் பாசில் நடிக்கவுள்ள ‘தூமம்’ மற்றும் ஸ்ரீ முரளி நடிக்கும் ‘பகீரா’ உள்ளிட்ட படங்களை தயாரிக்கிறது.

ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துவிட்டு அடுத்த 5 ஆண்டுகளில் படங்களை தயாரிக்க சுமார் 3,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

Related post