யுவன் ஷங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம்… வாழ்த்தும் ரசிகர்கள்!

 யுவன் ஷங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம்… வாழ்த்தும் ரசிகர்கள்!

தமிழ் சினிமா உலகில் இசைக்கென்று தனி முத்திரை பதித்து லட்சக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் தான் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

பாடல்கள் மட்டுமல்லாது பின்னணி இசையிலும் இவரது சாதனை அசாத்தியமானது. 1997 ஆம் ஆண்டு ஆரம்பித்த இவரது பயணம் இதுவரை 150 படங்களை தாண்டி சினிமா உலகில் முத்திரை பதித்து வருகிறார்.

தற்போதி விஷாலின் லத்தி, தனுஷின் நானே வருவேன் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா.

இந்நிலையில், சத்தியபாமா கல்லூரியின் 31வது ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளவரவிக்கப்பட்டது.

யுவன் ஷங்கர் ராஜாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

 

Related post