இந்த மாதிரி ஒரு கலெக்‌ஷனை என் வாழ்க்கையில் பார்த்ததில்லை – ”விக்ரம்” படம் பற்றி பிரபல தயாரிப்பாளர்!!

 இந்த மாதிரி ஒரு கலெக்‌ஷனை என் வாழ்க்கையில் பார்த்ததில்லை – ”விக்ரம்” படம் பற்றி பிரபல தயாரிப்பாளர்!!

ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. கடந்த ஜுன் 3 ஆம் தேதி இப்படம் திரைக்கு வந்தது.

வெளியான நாள் முதல் இதற்கு மக்கள் கொடுத்த ஆதரவைக் கண்டு தமிழ் சினிமாவே ஆச்சரியத்தில் பார்த்து வருகிறது. பத்து நாட்களில் 300 கோடி வசூலை குவித்த இப்படம், தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கே ஆர் அவர்கள் அளித்த பேட்டியில், “ நான் இதுவரை என் வாழ்வில் இப்படியொரு கலெக்‌ஷனை பார்த்ததில்லை. விக்ரம் படத்தை பார்த்த ரசிகர்களே பார்த்து இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இதுவரை எந்த நடிகர்களும் செய்யாத ஒரு சாதனையை கமல்ஹாசன் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் மானத்தையும் மரியாதையையும் காப்பாற்றியது விக்ரம் தான். பத்து நாட்களில் தயாரிப்பாளரின் கையில் மட்டுமே சுமார் 50 கோடியை இப்படம் கொடுத்திருக்கிறது. இதுவரை எந்த சினிமாவும் அப்படி கொடுத்ததில்லை.” என்று கூறியுள்ளார்.

Related post