மகன் பிரசாந்த் வாழ்க்கைக்காக நடிப்பதையே நிறுத்திக் கொண்டவர் தியாகராஜன் – இயக்குனர் பேரரசு!

 மகன் பிரசாந்த் வாழ்க்கைக்காக நடிப்பதையே நிறுத்திக் கொண்டவர் தியாகராஜன் – இயக்குனர் பேரரசு!

சுந்தர் பாலு இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், சுபிக்‌ஷா, ஆஷ்னா சவேரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “கன்னித்தீவு”.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பேரரசு, தயாரிப்பாளர் கே ராஜன், நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் மற்றும் ஆர் கே சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குனர் பேரரசு, “ இன்னமும் மலையூர் மம்பட்டியான் படத்தில் தோன்றியது போன்ற ஒரு தோற்றத்தில் இருக்கிறார் தியாகராஜன். தன் மகன் பிரசாந்த் நடிப்பதற்காக தான் நடிப்பதையே நிறுத்திக் கொண்டவர் தியாகராஜன். தன் மகனுக்காக வாழ்நாள் முழுவதும் ஓடிக் கொண்டிருப்பவர்” என்று பெருமையாக கூற திரையரங்கில் இருந்த அனைவரும் கைதட்டி தியாகராஜனை பெருமைபடுத்தினர்.

Spread the love

Related post