இந்தியன் 2 ரிலீஸ் எப்போது தெரியுமா.?

 இந்தியன் 2 ரிலீஸ் எப்போது தெரியுமா.?
Digiqole ad

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்க உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “இந்தியன் 2”.

படத்தின் படப்பிடிப்பு சில பல இடையூறுகளுக்கு மத்தியில் மீண்டும் துவங்கியிருக்கிறது. மிக வேகமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் சித்தார்த்த ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

அதோடு நவரச நாயகன் கார்த்திக் இப்படட்தில் வித்தியாசமான ரோலில் நடிக்க இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தினை அடுத்த வருட தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருப்போம்.

 

Digiqole ad
Spread the love

Related post