தொடங்குகிறது “இந்தியன் 2” படப்பிடிப்பு; ரெடியாகிறது பிரம்மாண்ட அரங்குகள்!

 தொடங்குகிறது “இந்தியன் 2” படப்பிடிப்பு; ரெடியாகிறது பிரம்மாண்ட அரங்குகள்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் தான் “இந்தியன் 2”. படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலே பல பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஒருவழியாக பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்தப்பட்டு, நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட இருக்கிறது. லைகா நிறுவனம் அதற்கான ஆயத்த பணிகளை துவக்கியிருக்கிறது.

இதற்காக சென்னை பிரசாத் லேப் அரங்கில் மிகவும் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி துவக்கியிருக்கிறார்கள் படக்குழுவினர்.

விரைவில் துவங்கவிருக்கும் படப்பிடிப்பில் உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொள்ளவிருக்கிறாராம்.

 

Related post