ஆரம்பமாகிறது “இந்தியன் 2” படப்பிடிப்பு…!!

 ஆரம்பமாகிறது “இந்தியன் 2” படப்பிடிப்பு…!!

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் “இந்தியன்”.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை உருவாக்கும் பணியில் லைகா, ஷங்கர், கமல்ஹாசன் இவர்கள் மூவரும் இணைந்து களத்தில் இறங்கினர்.

அதன்பிறகு, படப்பிடிப்பில் நடைபெற்ற விபத்து, கமல்ஹாசனுக்கும் ஷங்கருக்குமான இடையே மனக்கசப்பு என படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை நடத்த தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்த பேச்சுவார்த்தையை நடத்தியது.

இதில் அனைவரும் ஒத்துழைக்க, படப்பிடிப்பை ஆரம்பிக்க தயாராகி வருகின்றனர்.

அடுத்த மாதம் 15 தேதியளவில் மீண்டும் படப்பிடிப்பைத் துவங்க படக்குழு திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடர ஆயத்தமாகி வருகிறது.

இதற்காக சாலிகிராமத்தில் பிரம்மாண்ட செட் அமைக்க தயார் செய்யப்பட்டு வருகிறது.

இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவிருக்கிறார்.

 

Related post