தயாராக இருங்கள்… ”விக்ரம்” கொடுத்த வெற்றியில் “இந்தியன் 2” அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்!

 தயாராக இருங்கள்… ”விக்ரம்” கொடுத்த வெற்றியில் “இந்தியன் 2” அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்!
Digiqole ad

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க கடந்த வெள்ளியன்று உலகம் முழுக்க வெளியான திரைப்படம் தான் “விக்ரம்”.

ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் இப்படத்தை பெரிதாக கொண்டாடி வருகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல ஒரு ஆக்‌ஷன் படத்தை பார்த்த உற்சாகத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

பிரபலங்கள் பலரும் உலகநாயகனுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல ஒளிப்பதிவாளரான ரத்னவேலு இந்த படத்தை பார்த்துவிட்டு, “கமல் சார் புதிய அவதாரத்தில் அனைத்து சிலிண்டர்களையும் எரிக்க விட்டுள்ளார். லோகேஷ் கனகராஜிடமிருந்து பிரமிக்க வைக்கும் புதுவித ஆக்ஷன் திரில்லர் விக்ரம்” என கமல் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் தனது பாராட்டுக்களை கூறியுள்ளார்.

ரத்னவேலுவின் பாராட்டுக்களுக்கு பதில் அளிக்கும் விதமாக கமலும் உற்சாகமாக, “நீங்களும் உங்களது சிலிண்டர்களை நிரப்பி தயாராக இருங்கள். மேலும் நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி மீண்டும் விரைவில் இணைந்து பணியாற்ற இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

ஒளிப்ப்திவாளர் ரத்னவேலு தான் இந்தியன் 2 படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Digiqole ad
Spread the love

Related post