ஒரே படத்தில் இந்தியாவின் “சூப்பர் ஸ்டார்ஸ்”; எல்லாமே ஒரு வியூகம் தான்;

 ஒரே படத்தில் இந்தியாவின் “சூப்பர் ஸ்டார்ஸ்”; எல்லாமே ஒரு வியூகம் தான்;

நயன்தாராவுடன் முதல் படம் எடுத்து வெற்றி கண்ட இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இரண்டாம் படத்தில் நண்பன் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை தூக்கி விட்டு தூள் பறக்க விட்டார்.

ஆனால், விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை வைத்து இயக்கிவரும் நெல்சன். இதுவரை சூப்பர் ஸ்டாரை யாரும் பார்க்காத சால்ட் அண்டு பெப்பர் லுக்கில் “ஜெயிலர்” படத்தில் நெல்சன் காட்டியிருக்கிறார். படத்தின் போஸ்டர் வெளியான போது படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பயங்கரமாக அதிகரித்தது. மேலும் தற்போது இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாக இருக்கிறது. இதற்காக பெரிய மாஸ்டர் பிளானை போட்டிருக்கிறார் நெல்சன்.

இந்தப் படத்தை பக்காவான பான் இந்தியா படமாக எடுக்கவிருக்கும் நெல்சன், தற்போது தரமான சம்பவமாக நான்கு மாநிலங்களின் சூப்பர் ஸ்டார்களை களம் இறக்க இருக்கிறார். இவர்கள் இணைவதால் இந்தப் படம் மிகப்பெரிய பான் இந்தியா படமாக உருவாவதோடு, வசூலையும் அள்ளிக் குவிக்க காத்திருக்கிறது.

கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த ஜெயிலர் படத்தில், மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட உலகின் சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் இந்தப் படத்தில் இணைகின்றனர். மேலும், ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் இப்படத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் சூப்பர் ஸ்டார் களை தன்னுடைய படத்தில் களம் இறக்கி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டார் இயக்குனர் நெல்சன். இந்த படம் பான் இந்தியா மூவியாக ரிலீஸ் ஆகும் போது அந்தந்த மாநிலங்களில் வசூலை வாரி குவிக்கும் என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை.

ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் இருந்தாலும், “விக்ரம்” படத்தின் வசூலை முந்துவதற்காக தான் இவ்வளவும் என LCU ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

Related post