இந்த கிரைம் தப்பில்லை விமர்சனம்

 இந்த கிரைம் தப்பில்லை விமர்சனம்

ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன், வெங்கட் ராவ், கிரேசி கோபால் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் தேவகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “இந்த கிரைம் தப்பில்லை”.

கிராமத்தில் இருந்து சிட்டிக்கு வேலைக்கு வருகிறார் மேக்னா. சிட்டிக்கு வந்ததும் சிட்டி பெண்ணாக மாறி மார்டனாக தன்னை மாற்றிக் கொள்கிறார் மேக்னா.

அங்கு ஒரு செல்போன் கடையில் வேலை பார்க்கிறார். அங்கு மூன்று இளைஞர்களின் நட்பு கிடைக்கிறது. மூன்று இளைஞர்களிடம் வேறு வேறு பெயரில் தன்னை அறிமுகப்படுத்தி அவர்களிடம் நட்பு பாராட்டுகிறார் மேக்னா.

இந்த நட்பை மூன்று இளைஞர்களும் காதலாக நினைத்துக் கொள்கின்றனர். அதே சமயத்தில் யாரையோ டார்கெட் செய்து ஆப்ரேஷன் ஒன்றிற்கு ப்ளான் செய்கிறார் ஆடுகளம் நரேன்.

மூன்று இளைஞர்களை மேக்னா எதற்காக ஏமாற்ற வேண்டும்.? ஆடுகளம் நரேன் என்ன ஆப்ரேஷன் செய்ய காத்திருக்கிறார்.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றத்தை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பெண்களை தொடும் காமூகன்களை நாமளும் தண்டிக்கலாம். அப்படி தண்டித்தால், இந்த கிரைம் தப்பில்லை என்று எடுத்துக் கொள்ளலாம் என்ற நோக்கில் படம் எடுக்கப்பட்டுள்ளது.

படத்தில் நடித்த நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டதை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். தொய்வோடு போகும் திரைக்கதையில் ஆங்காங்கே சில ஆக்‌ஷன் காட்சிகள் நம்மை ஆறுதல் படுத்துகிறது.

எது எப்படியாகினும், பாலியல் குற்றங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த படத்தை பாராட்டலாம்.

Spread the love

Related post