பிரபல பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!
தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் பைனான்சியராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் அன்புச்செழியன் வீடு, அலுவலகம் உட்பட அவருக்கு சொந்தமான சுமார் பத்து இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விக்ரம் படத்தின் வெளியீட்டு உரிமையை முதலில் அன்புச்செழியன் தான் வாங்கியதாகவும், அதன்பிறகு தான் உதயநிதி ஸ்டாலின் உள்ளே சென்று அப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியதாகவும் தகவல் இன்று வரை உலா வருகிறது.
சமீபத்தில், லெஜண்ட் சரவணன் நடித்து பல கோடி தயாரிப்பில் வெளியான லெஜண்ட் திரைப்படத்தின் தமிழக உரிமையை அன்புச் செழியன் தான் கைப்பற்றி வெளியிட்டார்.
நுங்கம்பாக்கம், தி நகர், மதுரை, தேனி,மேகமலை,உசிலம்பட்டி,குச்சனூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அன்புச்செழியனின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அன்புச்செழியனின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் முதல்வர் மு க ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.