ஜெயிலர் படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்

 ஜெயிலர் படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வருகிறது “ஜெயிலர்”.. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது.

படத்தின் படப்பிடிப்பு 7- சதவீதம் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பினை நடத்தி வருகிறது படக்குழு.

படத்தில் மோகன்லால், சிவ ராஜ்குமார், சுனில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், என பல பிரபலங்கள் படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜாக்கி ஷெராப்பும் இப்படத்தில் இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

பாலிவுட்டில் மிகப்பிரபலமான ஜாக்கி ஷெராப் பல வருடங்களுக்குப் பிறகு ரஜினியோடு கைகோர்த்திருக்கிறார்.

 

Spread the love

Related post