BREAKING NEWS – சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுத்துள்ள நடிகர் ஜெய்!

 BREAKING NEWS – சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுத்துள்ள நடிகர் ஜெய்!

தமிழ் சினிமாவில் தனி கதாநாயகனாகவும், பல கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிக்கும் படத்தில் தனித்துவமாகவும் திரையில் நம்மை சிரிக்கவும் ரசிக்கவும் செய்த நடிகர் தான் ஜெய். சசி குமார் இயக்கத்தில் வெளியான “சுப்ரமணியபுரம்” திரைப்படத்தில் கிராமத்து இளைஞனாக அறிமுகமாகிய ஜெய் கூடிய விரைவில் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

ராகுல் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் சார்பாக K திருக்கடல் உதயம் படத்தைத் தயாரிக்க, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் படம் “BREAKING NEWS”.

இப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடிகர் ஜெய் ரோபோக்களுடன் சண்டையிடும் ஆக்‌ஷன் காட்சிகள் மிக பிரம்மாண்டாகவும் அற்புதமாகவும் படமாக்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இப்படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன. படத்தின் கதாநாயகியாக தெலுங்கு பட நடிகை பானு ஸ்ரீ நடிக்கிறார். ராகுல் தேவ், தேவ் கில் வில்லன்களாகவும் சிநேகன் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும், பழ கருப்பையா, இந்திரஜா, ஜெய் பிரகாஷ், சந்தானபாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆண்ட்ரூ பாண்டியன் இயக்குகிறார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

Related post