ஜெயிலர் படத்தில் இணைந்த பிரபல நடிகை.. ஷூட்டிங் ஆரம்பம்.?

 ஜெயிலர் படத்தில் இணைந்த பிரபல நடிகை.. ஷூட்டிங் ஆரம்பம்.?

அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், வசந்த் ரவி, சிவராஜ்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இந்த படத்திற்காக பிரம்மாண்டமான ஜெயில் போன்ற செட் ஒன்று ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் தமன்னாவும் நடிக்கவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும், ஆகஸ்ட் 15க்கு மேல், அப்படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post