ரிலீஸ் தேதியை மாஸ் வீடியோ வெளியிட்டு அறிவித்த “ஜெயிலர்” டீம்!

 ரிலீஸ் தேதியை மாஸ் வீடியோ வெளியிட்டு அறிவித்த “ஜெயிலர்” டீம்!

சன் பிக்சர்ஸின் பிரமாண்டமான தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமானோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “ஜெயிலர்”.

படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், படத்தினை வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவெடுத்து நேற்றைய தினம் அதிகாரப்பூர்வமாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதில், ரஜினிகாந்த் காரில் வந்து இறங்குவது போன்ற மாஸ் எண்ட்ரீ காட்சி வெளியிடப்பட்டு, இணையத்தை பெரும் வைரலாக்கியிருக்கின்றனர் படக்குழுவினர்.

மிகவும் ஸ்டைலான லுக்கில் ரஜினிகாந்த் தோன்றியதால், ரசிகர்கள் பெரிதளவில் இதனை கொண்டாடி வருகின்றனர்.

 

Related post