அடுத்தடுத்து பெரிய நட்சத்திரங்களை இணைத்துக்கொண்ட “ஜெயிலர்”!

 அடுத்தடுத்து பெரிய நட்சத்திரங்களை இணைத்துக்கொண்ட “ஜெயிலர்”!

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது..

இந்த வருடத்தின் கோடை விடுமுறையை முன்னிட்டு படத்தினை திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தில் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்ட மிகப்பெரிய ஜாம்பவான்கள் இப்படத்தில் இணைந்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகை தமன்னாவும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு நேற்று அறிவித்தது..

ஏற்கனவே இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கேரள நடிகர் விநாயகன் மற்றும் வசந்த ரவி உள்ளிட்ட நட்சத்திரங்களும் இப்படத்தில் உள்ளனர்.. அடுத்தடுத்து பெரிய பெரிய நட்சத்திரங்கள் படத்தில் இணைவதால் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது..

 

Related post