இறுதி கட்டத்தை எட்டும் ஜெயிலர்… விரைவில் அப்டேட்

 இறுதி கட்டத்தை எட்டும் ஜெயிலர்… விரைவில் அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் ஜெயிலர்.

இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார்.

தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது.

முன்னதாக படம் குறித்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என அறிவித்திருந்தார்.

தொடர்ந்து கடலூர், ஈ சி ஆர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு முழுவதுமாக முடியும் தருவாயில் இருக்கிறது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. |

 

Related post