வெளியீட்டுக்கு நாள் குறித்த “ஜெயிலர்” டீம்!

 வெளியீட்டுக்கு நாள் குறித்த “ஜெயிலர்” டீம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் “ஜெயிலர்”. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தில் வசந்த் ரவி, சுனில், ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரும் இதில் நடித்து வருகின்றனர்.

படம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதால், படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் ரிலீஸ் தேதியையும் உறுதி செய்யும் பணியில் இருக்கிறது படக்குழு.

இந்நிலையில், படத்தினை வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாம்.

ஆகஸ்ட் 11ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படம் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post