கடலூரில் ரஜினியின் “ஜெயிலர்” படப்பிடிப்பு; திணறிய போலீசார்!!

 கடலூரில் ரஜினியின் “ஜெயிலர்” படப்பிடிப்பு; திணறிய போலீசார்!!

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். அதனால் முழுக்க முழுக்க ஜெயிலில் நடப்பது போன்று காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு மாதத்திற்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பு தற்போது கடலூர் அருகே நடைபெற்று வருகிறது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் ரஜினி மற்றும் யோகிபாபு நடிக்கும் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடலூர் பகுதியில் ஜெயிலர் படப்பிடிப்பு நடைபெற்றதால் ரஜினி பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். இதனால் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர் .

 

Related post