வதந்திகளை பரப்ப வேண்டாம்.. – ஜான்விகபூர் குறித்து போனி கபூர்!

 வதந்திகளை பரப்ப வேண்டாம்.. – ஜான்விகபூர் குறித்து போனி கபூர்!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விரைவில் பையா 2 உருவாக இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்தி இணையத்தில் பரவி வருகிறது.

இதில், கார்த்திக்குப் பதிலாக ஆர்யா நடிப்பார் என்றும் நாயகியாக ஜான்வி கபூர் நடிப்பார் என்றும் தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது,

இந்நிலையில், தயாரிப்பாளரும் ஜான்வி கபூரின் தந்தையுமான போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் , “இந்த நிமிடம் வரை ஜான்வி கபூர் தமிழ் திரைப்படங்கள் எதற்கும் ஒப்பந்தமாகவில்லை. தயவு செய்து தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related post