தீபாவளி ரேசில் கார்த்தியின் ஜப்பான்!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் தான் ஜப்பான். இப்படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.
இன்னும் ஓரிரு வாரத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் கார்த்தியின் பிறந்தநாள் என்பதால், படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் தீபாவளிக்கு ஜப்பான் திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அயலான், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்கள் தீபாவளிக்கு ரிலீஸாவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
அந்த வரிசையில் கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும் வெளியாகிறது..