கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்”!!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “ஜிகர்தண்டா”. இப்படம் மிகப்பெரும் வெற்றிபெற்றதையடுத்து இதன் இரண்டாம் பாகம் விரைவில் வரும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று அதற்கான அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்கு “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” என டைட்டில் வைத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
இதில், ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிக்கவிருக்கின்றனர். இப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியாகி இணையத்தில் பெரும் வைரலானதோடு மட்டுமல்லாமல், பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
படத்திற்கு இசையமைக்கிறார் கார்த்தி சுப்புராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு செய்கிறார் திருநாவுக்கரசு.
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.