விஜய் மறுத்த கதாபாத்திரத்தை நடிக்கும் ஹீரோ; “காமெடி ஆகம இருந்தா போதும்” – நெட்டிசன்கள்;

 விஜய் மறுத்த கதாபாத்திரத்தை நடிக்கும் ஹீரோ; “காமெடி ஆகம இருந்தா போதும்” – நெட்டிசன்கள்;

தல அஜித் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான “என்னை அறிந்தால்” படத்தில் விக்டர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் மிரட்டினார் அருண் விஜய். பிறகு அவருடைய மார்க்கெட்டே வேறு லெவலுக்கு சென்றது. இந்தப் படத்திற்குப் பிறகு அருண் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்புகள் குவியத் துவங்கியது.

ஆனால், இவர் ஹீரோவாக நடிக்கவே ஆசையென்பதால் வில்லன் பாத்திரத்தை ஏற்க மறுக்கிறார். தற்போது, தெலுங்கில் நாக சைதன்யா வைத்து இயக்கி வருகிறார் வெங்கட்பிரபு அப்படத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தம் செய்தார்.

பிறகு, அதில் நடிக்க விருப்பமில்லாமல் விலகி இருக்கிறார். தற்போது, அருண் விஜய்க்கு பதில் தமிழ் கதாநாயகன் ஒருவர் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தெலுங்கு படத்தில் இவர் நடிக்கும் முதல் படம் இதுதான். இந்தப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

தற்போது, ஒப்பந்தமாகியுள்ள நடிகரை பொதுவாக தமிழ் படத்திலேயே வில்லனாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அப்படி இருக்கும்போது தெலுங்கில் நாக சைதன்யாவிற்கு வில்லனாக நடிக்க ஜீவா முடிவெடுத்திருக்கிறார். ஜீவாவும் தமிழ்சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.

இவரைப் பார்த்தால் ரசிகர்கள் பலருக்கும் “சிவா மனசுல சக்தி”, “கலகலப்பு-2” போன்ற படங்கள் தான் ஞாபகம் வரும். அப்படிப்பட்ட இவரை தெலுங்கில் வில்லனாக காண்பித்து காமெடியாக போகின்றனர் என்றும் ஜீவாவின் முடிவுக்கு நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகின்றனர்.

கடந்த சில வருடங்களாக ஜீவாவுக்கு ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து விட்டதால், இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம். இருப்பினும் கதாநாயகனாக பார்த்த ரசிகர்கள் வில்லனாக ஜீவா எப்படி இருப்பார் என்பதைப் பார்க்கவும் காத்திருக்கின்றனர்.

 

Related post