தனிகட்சி மூலம் அரசியல் களம் வகித்த குமரி. டிக்சன் தற்பொழுது சினிமா துறையில் கால்பதித்திருக்கிறார்.

 தனிகட்சி மூலம் அரசியல் களம் வகித்த குமரி. டிக்சன் தற்பொழுது சினிமா துறையில் கால்பதித்திருக்கிறார்.
Digiqole ad

தனிகட்சி மூலம் அரசியல் களம் வகித்த குமரி. டிக்சன் தற்பொழுது சினிமா துறையில் கால்பதித்திருக்கிறார். தற்பொழுது மகிழ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான “கபளீஹரம்” எனும் சினிமாவில் ஹீரோவாக  நடித்து முடித்துள்ளார்.  இந்த திரைப்படம் கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களுர், சென்னை, மகாராஷ்ட்ரா மற்றும்  கர்நாடகா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து நிறைவடைந்துள்ளது.  இத்திரைப்படத்தில் முருகவேல் எனும் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இத்திரைப்படத்தில் மைம் கோபி, யோகிராம், மற்றும் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். கிருஷ்ணகிரியில்  அண்மையில் டிரைவர், கிளீனர்களை கொடூரமாக கொலை செய்து லாரிகளை கடத்தும் வட இந்திய கும்பல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இத்திரைப்படம் கதையமைக்கப் பட்டுள்ளது.

டைரக்டர், மது, விஜய், பிரதீப் குமார்,பென்சீர், குமரி. டிக்சன் என்னும் அவரது பெயரை தக்ஷன் விஜய் என்று மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இத்திரைப்படம் நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று தக்ஷன் விஜய் கூரினார்.

Digiqole ad
Spread the love

Related post