கடைசி காதல் கதை விமர்சனம்

 கடைசி காதல் கதை விமர்சனம்

ஆகாஷ் பிரேம் குமார், எனாக்ஷி, புகழ், மைம் கோபி, VJ ஆஷிக், சாம்ஸ், பிரியங்கா, அணு, மிதுன்யா, நிசார், ஸ்வப்னா, க்ரித்திகா நடிப்பில், RKV இயக்கத்தில் S கியூப் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் E மோகன் தயாரித்துள்ள படம் “கடைசி காதல் கதை”.

கதைப்படி,
காதல் தொலைவியால் மனநிலை பாதிக்கப்பட்டுள்ள ஹீரோ, ஒரு மருத்துவரிடம் அனுமதிக்கப்படுகிறார். பின்பு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சில புத்தகங்களை அந்த டாக்டர் கொடுக்க. அதை படித்து அதில் தீர்வு கண்டுவிட்டதாக அங்கிருந்து தப்பிச்செல்கிறார் ஹீரோ.

அந்த தீர்வு என்ன வென்றால், அனைவரும் உடை அணிந்திருப்பதால் தான் காதல் வருகிறது. அந்த ஈர்ப்புக்கு ஆடை தான் காரணம். ஆகையால் பழங்கால முறைப்படி அனைவரும் ஆடையில்லாமல் வாழ வேண்டும். அதற்கு முதலில் நம் நண்பர்களை ஆடையில்லாமல் பழக்க வேண்டுமென, கோக்கு மாக்கான ஒரு முடிவை எடுக்கிறார் ஹீரோ.

அதில் முதல் பலியாக ஹீரோவின் நண்பர் சிக்கிக்கொள்ள அதோடு முதல் பாதி முடிவடைகிறது. பின்னர், தனது மற்ற நண்பர்களையும் காதலிகளையும் அந்த இடத்திற்கு வர செய்து அனைவரின் துணியையும் கழட்ட வைப்பது ஹீரோவின் திட்டம். அந்த திட்டம் நிறைவேறியதா? நிலை குலைந்ததா? என்பது மீதிக்கதை…

நண்பர்களாக நடித்திருக்கும் VJ ஆஷிக், புகழ் மற்றும் நோபல் அவர்களின் நடிப்பு சுமார் தான். அனைவரையும் அன்றாடம் யூட்யூப் மற்றும் தொலைக்காட்சியில் பார்த்திருந்தாலும் அவர்களுக்கு நடிப்பு என்பது எடுபடவில்லை. அவர்கள் நம்மை என்டர்டெய்ன் செய்ய நினைத்தால் தற்போதுள்ள துறையில் இருப்பதன் மூலமாக தான் முடியும்.

ஹீரோவாக நடித்திருக்கும் ஆகாஷ், க்ளோஸ் அப் ஷாட்களில் பதட்டமடைகிறார். மற்றபடி, பல காட்சிகளில் அவரின் காதல் தோல்வியை முகத்தில் சுமந்து தான் நடித்திருக்கிறார்.

இப்படிப்பட்ட ஒரு வினோதமான கதையை எங்கிருந்து தான் இயக்குனர் RKV சிந்தித்தாரோ தெரியவில்லை. ஆனால், முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் நகைச்சுவை அதிகம்.

இப்படியான இக்கட்டான ஒரு முடிவை எடுத்துள்ள ஹீரோவுக்கு எப்படியான க்ளைமாக்ஸ் வைத்திருப்பார் என்ற கேள்வி அனைவரின் மனத்திலும் எழும். அதை சரியாக சரியான விஷயத்தை சொல்லி படத்தை முடித்துள்ளார் இயக்குனர் RKV.

கடைசி காதல் கதை – 2022ன் கடைசி காதல் படம்.

Related post