Kadaisi vivasayi Movie Review

 Kadaisi vivasayi Movie Review

கடைசி விவசாயி : நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில், காக்கா முட்டை மற்றும் ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் வரும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. படத்தின் கதை மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் வாழும் ஒரு விவசாயியை பற்றியும் அந்த கிராமத்தில் வாழும் மக்களை சுற்றி நடக்கிறது கதை. நீண்ட நாட்களாக ஊரில் மூடி இருக்கும் சாமியை கும்பிட ஊர் மக்கள் முடிவெடுத்து அதற்காக அந்த ஊரில் உள்ள அனைவரிடமும் ஒரு பொறுப்புகளை தருகிறார்கள், சியான் என்று ஊர் மக்களால் அழைக்கபடும் விவசாயி நல்லாண்டி அவர்களிடம் பயிர் விளைவித்து தரும் பொறுப்பு தரப்படுகிறது, அதற்குள் அவர் ஒரு காரணத்திற்காக கைது ஆகி சிறை செல்கிறார். அது எதற்கு ? பயிர்கள் என்ன ஆனது ? ஊர் திருவிழா நடைபெற்றதா ? போன்ற கேள்விகளுக்கு படத்தில் உயிர்ப்புடன் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.

படத்தின் ஒட்டுமொத்த ஆளுமை விவசாயியாக வரும் நல்லான்டி அவர்கள் தான் மனிதரிடம் அப்படி ஒரு நடிப்பு முக பாவனைகளை வைத்து நம்ம அழவெய்கிரார் சில காட்சிகளில் , அவர் ஒரு நிஜ விவசாயி என்பது கூடுதல் தகவல்.அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் வரும் ஊர் மக்கள் அனைவரும் உண்மையான கிராமத்தில் வரும் மக்கள் தான். அவர்களை எப்படி இவ்வளவு நேர்த்தியாக நடிக்க வைத்தார் இயக்குனர் என்று புரியவில்லை இருந்தாலும் அவருக்கு ஒரு சபாஷ். படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மயில்களும் நடித்துள்ளன. விஜய் சேதுபதி சிறிது நேரம் வந்தாலும் மனிதன் நடிப்பில் அசத்தி விட்டு போகிறார். படத்தில் வரும் ரெபேக்கா நல்ல தேர்வு. படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் நம்மை அந்த கிராமத்தில் வாழும் உணர்வை தரும் அப்படி இல்லையென்றால் இப்படி ஒரு அழகிய கிராமம் நம்ம ஊரில் உள்ளதா என்ற ஆச்சரியத்தை தரும் அதற்கு காரணம் படத்தின் ஒளிப்பதிவாளரும் இயக்குனர் மணிகண்டன் தான். படத்தின் இசை அருமை. இயக்குனர் மணிகண்டன் அடுத்த தலைமுறை விவசாயம் என்றால் என்ன என்பதை மறந்து விடக் கூடாது என்பதை மிக தெளிவாக நள்ளாண்டி அய்யா கதாபாத்திரத்தில் நமக்கு சொல்லியிருக்கிறார்.

கடைசி விவசாயி : கண்டிப்பாக பார்க்கவும்.

Related post