கைதி 2-வில் மாஸ் ஹீரோவை களமிறக்கும் லோகேஷ்

 கைதி 2-வில் மாஸ் ஹீரோவை களமிறக்கும் லோகேஷ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் கைதி. இப்படத்தைத் தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் என இரண்டு ப்ளாக் பஸ்டர் படங்களை இயக்கியிருந்தார் லோகேஷ்.

இதனைத் தொடர்ந்து தற்போது விஜய்யை வைத்து அடுத்த படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார். இந்நிலையில், கைதி 2 படத்திற்கான ஆரம்ப பணிகளையும் கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ்.

தளபதி விஜய்யின் படத்தை இயக்கி முடித்தது உடனே கார்த்தியை வைத்து கைதி 2வை ஆரம்பிக்கவுள்ளாராம்.

இப்படத்தில் சூர்யா ரோலக்ஸ் கேரக்டரில் தோன்றவிருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் முக்கியமான கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கிறாராம்.

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கேரக்டரில் முதலில் ராகவா லாரன்ஸ் தான் நடிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், கைதி 2, கார்த்தி, vijay sethupathi, lokesh kanagaraj, kaithi 2, karthi,

Spread the love

Related post