கைதி 2 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான்.!?

 கைதி 2 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான்.!?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உருவான திரைப்படம் தான் கைதி. கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இது அமைந்தது.

100 கோடிக்கும் மேல் இப்படம் வசூலை வாரிக் குவித்தது. இப்படத்திற்கு பெரிய பலமாக பார்க்கப்பட்டது பின்னணி இசைதான். சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், கைதி 2 படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளையும் துவக்கியிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

விரைவில் படக்குழு படப்பிடிப்பிற்கு செல்ல வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், கைதி 2 படத்திற்கும் சாம் சி எஸ் அவர்களே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post