லோகேஷ் அன்கோ-விற்கு அள்ளிக் கொடுத்த ஆண்டவர்… உற்சாகத்தில் ரசிகர்கள்!

 லோகேஷ் அன்கோ-விற்கு அள்ளிக் கொடுத்த ஆண்டவர்… உற்சாகத்தில் ரசிகர்கள்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “விக்ரம்”.

கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம், வெளியான நாள் முதலே அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் வெறும் நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 175 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் உலகநாயகன், தனது இயக்குனர் லோகேஷை அழைத்து பரிசு ஒன்றை கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

கோடி மதிப்புடைய லெக்ஸாஸ் கார் ஒன்றை லோகேஷ் கனகராஜ்ஜிற்கு அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன். அதுமட்டுமல்லாமல், உதவி இயக்குனராக பணியாற்றிய சுமார் 13 பேருக்கு TVS Apache RTR 160 பைக்கை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இதனால், படக்குழுவினர் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். ரசிகர்கள் இந்நிகழ்வை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

 

Related post