மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்திற்கு 3 கதைகளா?

 மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்திற்கு 3 கதைகளா?
Digiqole ad

தமிழ் சினிமாவில் பலருக்கும் எடுத்துக்காட்டாகவும் முன்னோடியாகவும் அசைக்க முடியா இடத்தில் இருப்பவர்கள் மணிரத்னம் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன். இவர்களை திரைத்துறை ஜாம்பவான்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

1987ம் ஆண்டு இவர்களின் கூட்டணியில் வெளியான “நாயகன்” திரைப்படம். இன்றுவரை பலர் திரைத்துறைக்கு வர காரணமாக அமைந்துள்ளது. தற்போது, மீண்டும் மணிரத்னம்-கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகவுள்ள #KH234 படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும், இப்படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் அளித்திருந்த பேட்டி ஒன்றில். மணிரத்னம்-கமல் கூட்டணி குறித்து கமல் ஹாசன் 4 நாட்களுக்கு முன்பே என்னிடம் கூறியிருந்தார். #KH234 படத்திற்காக மொத்தம் மூன்று ஒன்லைன்கள் அமைத்திருப்பதாகவும். முழுக்கதை இன்னும் முடிக்கப்படவில்லை எனவும் கமல் தெரிவித்ததாக, உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.

Digiqole ad
Spread the love

Related post