சிம்புவோடு கைகோர்க்கும் கமல்ஹாசன்!?

மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்பு, அடுத்தடுத்த படங்களில் மிகவும் மும்முரமாக நடித்து வருகிறது.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு.
இதனைத் தொடர்ந்து தற்போது பத்து தல படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார் சிம்பு.
இப்படத்தினைத் தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம் சிம்பு.
இன்னும் இயக்குனர் யார் என்று முடிவாகவில்லையாம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.