பாகுபலி இயக்குனர் SS ராஜமெளலியோடு கைகோர்க்கும் கமல்ஹாசன்!

 பாகுபலி இயக்குனர் SS ராஜமெளலியோடு கைகோர்க்கும் கமல்ஹாசன்!

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கிய எஸ் எஸ் ராஜமெளலி அடுத்ததாக ராம் சரண் மற்றும் ஹுனியர் என் டி ஆரை வைத்து “ஆர் ஆர் ஆர்” என்ற படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரும் வசூலை வாரிக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து, ராஜமெளலி அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார். இப்படம், முந்தைய படங்களை விடவும் அதிக பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில், மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் கமல்ஹாசனை அனுகியுள்ளது ராஜமெளலி தரப்பு.

இன்னமும் க்ரீன் சிக்னல் கொடுக்காமல் சற்று யோசித்து சொல்கிறேன் என்று கூறி அனுப்பிவிட்டாராம் கமல்ஹாசன்.

Related post