தூசி தட்டப்படும் மருதநாயகம்… கமல் ரசிகர்களுக்கு ஒரு செம விருந்து!

 தூசி தட்டப்படும் மருதநாயகம்… கமல் ரசிகர்களுக்கு ஒரு செம விருந்து!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் “விக்ரம்”. சுமார் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்தது இப்படம்.

இந்த படத்தை கமல் தனது நிறுவனமான ராஜ் கமல் மூலமாகவே தயாரித்திருந்தார். இதனால், தயாரிப்பு நிறுவனத்துக்கு பல கோடிகள் லாபம் கிடைத்துள்ளது.

இதனால், தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து பல படங்களை தயாரிக்க முடிவெடுத்த கமல், தொடர்ந்து உதயநிதி, சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களையும் தயாரிக்கவிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு முன் கமல்ஹாசன் நடித்து தயாரித்து இயக்கிய படம் தான் “மருதநாயகம்”. சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற அப்படம் பாதியில் நின்று போனது.

உலக சினிமாவே வியக்கும் அளவிற்கான மேக்கிங்கில் எடுக்கப்பட்ட அப்படம், சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாகவும் இருந்தது.

இந்நிலையில், வயது காரணமாக மிகவும் சிரமமான காட்சிகளை இனி அதில் படமாக்க முடியாது என முடிவுக்கு வந்தார் கமல். அதிக செலவில் மிக நுணுக்கமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படத்தை இயக்கும் முடிவுக்கு தற்போது கமல் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் அதற்கான ஆயத்த பணிகளை கமல்ஹாசன் தொடங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காத்திருப்போம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை…

 

Related post