இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே… தளபதி படத்துல கமல்!?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் தனது 67வது படத்தில் நடிக்கிறார். விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கான வேலைகளை லோகேஷ் கனகராஜ் படுவேகமாக செய்து வருகிறார். சுமார் 6 மாதங்கள் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் நடிகர், நடிகைகளின் தேர்வு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில், இப்படத்தில் சிறிய கெஸ்ட் ரோலில் உலகநாயகன் கமல்ஹாசன் தோன்றவிருப்பதாக இணையத்தில் செய்திகள் தீயாக பரவி வருகிறது.

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 

Spread the love

Related post

You cannot copy content of this page