விருமாண்டி போல ஒரு படம்; விரைவில் கமலுடன் கைகோர்க்கிறார் பா ரஞ்சித்!

 விருமாண்டி போல ஒரு படம்; விரைவில் கமலுடன் கைகோர்க்கிறார் பா ரஞ்சித்!

கமல்ஹாசன் நடித்து தயாரித்துவரும் படம் “விக்ரம்”. படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இயக்குனர் பா ரஞ்சித்.

அப்போது பேசிய இவர், “ கமல் சார் நடித்த அனைத்து படங்களும் மிகவும் பிடிக்கும். விரைவில் அவருடன் ஒரு படத்தின் இணைகிறேன்.

விருமாண்டி படத்தினை போல ஒரு படம் எடுக்க எனக்கு ஆசை. மதுரையை மையமாக வைத்து இயக்கவிருக்கிறேன். சிம்புவுடனும் ஒரு படம் இயக்க எனக்கு ஆசை. விரைவில் இணைவோம் என நம்புகிறேன்.” என்று கூறினார்.

விரைவில் பா ரஞ்சித் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணையும் படத்தின் அறிவிப்பு வெளிவரலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Tags: 

Related post