அதீத எதிர்பார்ப்பு; புதிய சாதனை படைக்கத் தயாராகிறதா விக்ரம்!?

 அதீத எதிர்பார்ப்பு; புதிய சாதனை படைக்கத் தயாராகிறதா விக்ரம்!?

கம்ல்ஹாசன் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது விக்ரம். விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் இருவரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை கமல்ஹாசனே தயாரித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். நாளுக்கு நாள் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இப்படத்தின் வியாபாரம் தொடங்கி விளம்பரம் வரை அனைத்தும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் வெளியாகும் இப்படம் மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறதாம். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என்ற மூன்று மொழிகளில் வெளியாக இருப்பதால், அமெரிக்காவில் விக்ரம் மிகப்பெரும் வசூல் வேட்டை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 15 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related post