மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் கமல்ஹாசன்.. அறிவிப்பால் அதிர்ந்து போன கோலிவுட்

 மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் கமல்ஹாசன்.. அறிவிப்பால் அதிர்ந்து போன கோலிவுட்

கமல்ஹாசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நேற்று மாலை வெளியானது.

இந்த திரைப்படத்தை ராஜ் கமல் & ரெட் ஜெயண்ட் & மெட்ராஸ் டாக்கீஸ் என மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கிறது.

கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க மணிரத்னம் இப்படத்தை இயக்கவிருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவிருக்கிறார்.

படம் 2024 ஆம் ஆண்டு திரைக்கு வரும் எனவும் படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன்-2 திரைப்படத்தை முடித்தவுடன் மணி ரத்னம் இயக்கவுள்ள படத்தில் கமல்ஹாசன் இணையவுள்ளார் என்ற அறிவிப்பால் ரசிகர்கள் இதை பெரிதாக கொண்டாடி வருகின்றனர்.

 

Related post