பிக் பாஸ்க்கு எண்ட் கார்ட் போடும் கமல்!

 பிக் பாஸ்க்கு எண்ட் கார்ட் போடும் கமல்!

தனியார் தொலைக்காட்சியான விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.

தொடர்ந்து 6 சீசன்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன்.

இந்நிகழ்ச்சி இவ்வளவு தூரம் பிரபலமாவதற்கு உறுதுணையாக இருப்பவர் கமல்ஹாசன் தான்.

இவரின், அடுத்தடுத்து படங்கள் தவிர அரசியல் பணிகளும் இருப்பதன் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது நடைபெற்று வரும் 6-வது சீசன் தான் கமல் தொகுத்து வழங்கும் கடைசி சீசனாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சீசனின் பைனலில் பிக்பாஸில் இருந்து தான் விலக உள்ள அறிவிப்பை கமல் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

 

Related post