விக்ரம் வெற்றி; அழைத்து பாராட்டியதற்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்!

 விக்ரம் வெற்றி; அழைத்து பாராட்டியதற்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் “விக்ரம்”. இரண்டு வாரங்களாக திரையரங்குகளை ஆக்கிரமித்து மிக பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்திருக்கிறது இப்படம்.

வசூல்மழையில் நனைந்து விக்ரம் படத்தை பல நட்சத்திரங்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, கமல்ஹாசன் மற்றும் லோகேஷ்கனகராஜ் இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்து பட வெற்றிக்கு விருந்து கொடுத்திருக்கிறார். இந்நிகழ்ச்சியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த அழைப்பிற்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன், தனது ட்விட்டர் பகக்த்தில், “நன்றி சிரஞ்சீவி சார். கே பாலசந்தரிடம் நாம் இருவரும் ஒன்றாக இருந்த காலத்தை நினைவு கூர்ந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

நமது பரஸ்பர நண்பரான சல்மான் பாயுடன் உரையாடியதும் மகிழ்ச்சி. சிறந்த மாலையாக அமைந்தது. எங்களை கவனித்துக் கொண்ட உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

இவர்கள் அனைவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.

Related post