வெற்றிகள் குவியட்டும் – கமலை வாழ்த்திய இளையராஜா!!

 வெற்றிகள் குவியட்டும் – கமலை வாழ்த்திய இளையராஜா!!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஜூன் 3ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் “விக்ரம்”.

இந்த வெற்றி தமிழ் சினிமாவையே புத்துணர்ச்சி ஆக்கியுள்ளது. பலரும் இந்த விக்ரம் வெற்றியை பெரிதாக கொண்டாடி வருகிறார்கள்.

பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை உலகநாயகனுக்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இசைஞானி இளையராஜாவும் தன்னுடைய வாழ்த்தினை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..

அதில், வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் ச-கோ-த-ர-ரே!!! மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது. விக்ர மாமுகம் தெரியுதே -அது வெற்றிப் புன்னகை புரியுதே! என மாற்றிக்கொள்ளலாம்.’ என்று கூறியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன், ‘நம் அன்பை எப்போதாவதுதான் நாம் பிரகடனப்படுத்திக்கொள்வோம். என்றென்றும் என் அன்பு உங்களுக்கும், உங்கள் ஆசி எனக்கும் உண்டு என உணர்ந்த உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன். நம் பயணம் என்றும்போல தொடர விழையும் உங்கள் நான்’ என்று கூறியுள்ளார்..

 

Related post