சூர்யாவின் வீடு தேடி சென்று நன்றி தெரிவித்த கமல்… நெகிழ்ச்சியான தருணம்!

 சூர்யாவின் வீடு தேடி சென்று நன்றி தெரிவித்த கமல்… நெகிழ்ச்சியான தருணம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதால் உற்சாகமடைந்துள்ள கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்-க்கு கார் பரிசாக வழங்கினார்.

இதனை தொடர்ந்து விக்ரம் படத்தின் உதவி இயக்குனர்கள் சுமார் 13 பேருக்கு கமல்ஹாசன் சர்ப்ரைஸாக பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார்.

கடைசி மூன்று நிமிடங்களில் தோன்றி திரையரங்கை அதிர வைத்த சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் அனைவராலும் பெரிதாக கொண்டாடப்பட்டது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று சூர்யாவை அவரது இல்லத்தில் சந்தித்தார் உலகநாயகன் கமல்ஹாசன்.

அப்போது சூர்யாவிற்கு 46 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரோலக்ஸ் கைக்கடிகாரத்தினை கமல்ஹாசன் பரிசாக வழங்கியுள்ளார்.

இதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து நடிகர் சூர்யா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

Related post